– 143 — தமிழகம் தன்னைக் காத்திடச் சொல்லிக் கமழ்நறும் பெண்மைக்குக் கடமையைத் தூண்டுவார்! "தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய்-பெண்ணே தமிழரின் மேன்மையைக் காப்பாய்! தமிழகம் நம்மதென் ருர்ப்பாய்! தடையினைக் காலினுல் தேய்ப்பாய்' ‘அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ - என்று மெச்சும் பெண்மையின் மேன்மையைப் பாடியோர் உச்சுக் குடுமிகள் காலத்தில் உண்டா? 'கலியாணம் ஆகாத பெண்ணே!-உன் கதிதன்னை நீநிச் சயம்செய்க கண்ணே! வல்லமை பேசியுன் வீட்டில்-பெண் வாங்கவே வந்திடு வார்சில பேர்கள்! நல்ல விலைபேசு வார்கள்-உன்னை நாளும் நலிந்து சுமந்துபெற் ருேர்கள்; கல்லென உன்னை மதிப்பார்-கண்ணில் கல்யாண மாப்பிள்ளை தன்னையும்-காட்டார்; வல்லி உனக்கொரு நீதி-இந்த வஞ்சகத் தரகர்க்கு நீஅஞ்ச வேண்டாம்!” -என்று கூறி, கற்றவளே ஒன்று சொல்வேன்-உன் கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன் -என்று முடித்தவர், -
- * - அவர்
ஞாயந்தராவிடில் விடுதலை மேற்கொள் -என்று துணிவையும் ஏந்திழைக் குரைப்பார்! பெரிய உலகில் பெண்ணலம் பேசிய அரிய பாவலன் பாரதி தாசன்!