பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

தமிழகப் புலவர் குழுவின் கூட்டம் வாலாசாபாத்தில் நடந்தது. பாவேந்தருடன் உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை, அறிஞர் இ. மு. சுப்பிரமணியனார், மொழிப் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் மூவரும் கூடியிருந்து உரையாடியவை அனைத்தும் இன்றும் என் நெஞ்சத்தில் சந்தனச் சிற்பம்போல மணக்கின்றன. பாவேந்தர் மூவரிடத்தும் பேசும் ஒவ்வொரு பேச்சும் திடுதிடுதிப்பென்று, எழுந்த உணர்ச்சி வெள்ளமன்று, உரத்த குரலிலன்று, உரத்த சிந்தனையிலிருந்து கூர்மையான உள்ளார்ந்த உணர்ச்சித் தெறிப்புகள் ஆகும்.

பாவேந்தரின், முக்காலப் பேச்சிலும் இலக்கியம், இலக்கணம், அரசியல், சமயம் எந்தப் பேச்சும் உரையும் பாடலும் நகைச்சுவையின் நாடித்துடிப்புடன்தான் பேசும்.

பாவேந்தரின் வாழ்வு முப்பிரிவினை உடையது. வெடிப்பும் வீரியமும் நிறைந்த இளமைக்காலம்; துடிப்பும் தென்பும் தோய்ந்த இடைமைக் காலம்; நொடிப்பும் நுண்மையும் நுழைந்த முதுமைக் காலம். இந்த முக்காலத்திலும் அவரோடு பழகிய ஒவ்வொருவர்க்கும் எத்தனையோ நிகழ்ச்சிகள், எத்தனையோ நினைவுகள் இன்றும் என்றும் வாழும் கடலலை போன்றவை. அவரின் நகைச்சுவைச்சுடர் கேட்பவரின் உணர்ச்சி வானின் விளிம்புவரை சென்று மின்னலிடும் தன்மையன.

உண்ணும் சுவையின் அறுசுவையினையும் எண்ணும் சுவையின் ஒன்பதின் சுவையினும் கவிஞரின் எழுத்தும் பேச்சும் பண்ணும் சுவை பன்னூறு எனலாம்.

பாவேந்தரின் நட்புறவு நிகழ்ச்சிகள் ஒரு மொழியின்.,ஒர் இனத்தின் அறுபதாண்டுகாலத் தமிழக வரலாற்றுடன் இணைந்து பிணைந்தவையாகும். காலத்தின் அறுபருவத் திருக்கூத்தை உலகமொழிகள் எல்லாம் எப்படிக் காலங்காலமும் பாடி மகிழ்கிறதோ, அப்படித்தான் பாவேந்தரின் வாழ்வையும் அவருடன் பங்கு பெற்ற, பழகும் வாய்ப்புற்ற