பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

ஒவ்வொருவரும் மணிக்கட்டில் மூளையையும், விரல்களில் கண்களையும் எழுதுகோலில் அன்பையும் தென்பையும் கொண்டு எழுதி நிரைத்தாலும் முழுமையாகாதென்றே கருதுகிறேன்.

பாரதிதாசனின் அறிவின் பேராண்மை, பகுத்தறிவின் வீருண்மை, பாட்டின் பேராண்மை, அழகுணர்ச்சியின் சீராண்மை இவற்றின் ஒவ்வொன்றோடும் தொடர்புடையவர் ஒரு சிலரே. தனித்தனியே தொடர்புடையவர் பலர். இவர்கள் அனைவரும் ஜான்சனின் நண்பர் பாஸ்வெலாக, மார்க்சின் தோழர் ஏங்கெல்சாக, மீனாசி சுந்தரம்பிள்ளையின் மாணவர் உ. வே. சா ஆக மாறினாலும் பாவேந்தரின் வாழ்வை-வரலாற்றை நிறைவு செய்ய முடியுமா என்பது ஐயப்பாடே. வானினும் உயர்ந்து கடலினும் ஆழ்ந்து மண்ணினும் பரந்து விரிந்த வாழ்வு பாவேந்தருடையது.

பாரதிதாசன் தோற்றத்தில் தமிழின் விம்மிதத்தைக் கண்டவர் பெரியவர் முல்லை முத்தையா. அதைப்போல் அவர் தமிழ் ஊற்றத்தில்’பொதுமக்கள் நலம் நாடும் புதுக் கருத்தை’ப் போற்றினர் அதனுல்தான் பாரதிதாசன் 'முத்தையா என் சொத்தையா’ என்று உரிமை கொண்டாடினார்.

முல்லையில் மணந்து, முல்லைப்பதிப்பகத்தில் தமிழுறவு கொண்டவர் பாவேந்தர். பிஎல். முத்தையாவை முல்லை முத்தையா என்று தலையெழுத்தையே மாற்றிய பாவேந்தரோடு மூச்சுக்காற்றாக உடனிருந்தவர். செந்தமிழ்ப் பணிக்கெல்லாம் முந்திக் கொண்டவர். தமிழகத்தின் பல்வேறு அறிஞர்-தொழிலதிபர்- எழுத்தாளர்-கவிஞர்-செல்வர்களின் உறவெல்லாம் அவர்க்கு கிளைகளின் இலைகள் பெறும் நுகர்வென்றால் பாரதிதாசனின் உறவு ஆணிவேரும் பக்கவேரும் சல்லிவேருமாக ஊட்டம் கொண்டவர்.