பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1

கவிஞரின் திருமணம்

பாரதிதாசனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கவிஞருடைய அக்காள் கவிஞரைக் கூட்டிக்கொண்டு புவனகிரிக்கு அருகில் பெருமாத்தூர் கிராமத்துக்குச் சென்றனர்.

கவிஞருக்கு அப்பொழுது வயது முப்பது. கம்பீர மான தோற்றம்; மிக அழகாக இருப்பார். பெண்ணப் பார்த்தார் கவிஞர். பெண் சிறிது தொலைவில் உள்ளே நின்று கொண்டிருந்தது. கிராமத்துப் பெண்; கருப்புநிறம். கவிஞரோ பெண்ணேப் பார்த்து விட்டு, மெளனமாகவே உட்கார்ந்திருக்கிறார்.

அக்காள் கவிஞரைப் பார்க்கிறார். பிறகு பெண்ணின் அருகில் சென்றார், பெண்ணின் கண்களிலிருந்து கண்ணிர் பெருகியது. ‘என்னம்மா, என் கண் கலங்குகிறாய்?' என்று கேட்கிறார் அக்காள். "நான் அவரையேதான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கூறுகிறது பெண்.

கவிஞரிடம் வந்து, 'சுப்பு ஏன் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருக்கிறாய், அந்தப் பெண் அழுது கொண்டிருக்கிறது' என்கிறார் அக்காள்.