பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


“என் அழுது கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறார் கவிஞர்.

"உன்னேயேதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறி, அழுது கொண்டிருக்கிறது'’ என்கிறார் அக்காள்.

"அப்படியா? ஒரு பெண் என்னேயே கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறதா! அப்படியானால், அந்தப் பெண்ணையே நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று சம்மதம் தெரிவித்து விட்டார் கவிஞர்.

பிறகு, அந்தப் பெண்ணுக்கும் கவிஞருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அந்தப் பெண்ணே பழநி அம்மாள்!

இருவரும் இல்லற வாழ்வை நல்லறமாகக் கொண்டு வாழ்ந்து, மூன்று பெண்களையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தனர்.

கவிஞர் எழுதும் கவிதைகளையெல்லாம் மனைவியார் பழநி அம்மாளிடம் முதலில் வாசித்துக் காண்பித்து விடுவார்.


2

இனிமேல் அடக்கமாகத்தானே இருங்கள்!

நகரங்களிலும் சிற்றூர்களிலும் கவிஞரின் ரசிகர்கள் நிறைய இருக்கின்றார்கள். அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளுக் கவிஞர் செல்லும் பொழுது ஆங்காங்கே உள்ள ரசிகர்கள் பிரியத்தோடு கவிஞரை அழைத்துச் சென்று தங்கள் இல் லத்தில் விருந்து அளித்து உபசரித்து மகிழ்வார்கள்.