பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

 கவிஞர் பிரயாணம் செய்யும் போது, அவருடன் யாரேனும் ஒருவர் கூடப்போவது எப்பொழுதும் வழக்கம். தன்னோடு வருபவரிடம் பணப்பையைக் கொடுத்து விடுவார். ஏனென்றால், அவ்வப்போது பையைத் திறந்து, பணத்தை எடுத்துக் கொடுத்து, மீதியை வாங்கும் சிரமத்தை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

5
அதென்ன நாளைக்கு?

எந்த ஒரு காரியத்தையும் நாளைக்கு என்று ஒத்திப் போட்டுக்கொண்டு போவது கவிஞருக்கு அறவே பிடிக்காது.

எதை நினைக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அதை உடனே நிறைவேற்ற வேண்டும். "பிறகு செய்கிறேன், ‘’நாளைக்குச் செய்கிறேன்’' என்ற வார்த்தைகளை அவர் விரும்ப மாட்டார்.

“அதென்ன நாளைக்கு? இப்பொழுதே செய்யேன்” என்பார். இரவோ, பகலோ, நடந்து போவதோ, காரில் செல்வதோ அவற்றைப்பற்றி எல்லாம் கவிஞருக்குக் கவலை இல்லை. அவர் சொல்லியதை நிறைவேற்ற அப்பொழுதே எழுந்து செல்ல வேண்டும்.

துடிப்பும் ஆர்வமும் கவிஞருக்கு அதிகம்.


6

நீங்கள்......?

புதுச்சேரியில், கவிஞர் வீட்டுக்குப் பலர் வருவார்கள். எல்லோரும் வேறுபாடு இல்லாமல், சொந்த வீட்டைப் போல் கருதி தங்குவார்கள். உணவு கொள்வார்கள். ஆனால், கவிஞர் முகம் சுளிக்கமாட்டார்.