பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7

பாட்டாலே திருப்பி அடி

புதுவைக் கல்லூரியில் கவிஞர் படித்துக் கொண்டிருந்தார். அங்கே இருவர் கவிஞரின் நண்பர்கள். நண்பர் ஒருவரிடம் மற்றொருவர் இசை பயில விரும்பினார். இசை கற்றுக்கொள்ள தம் நண்பர் வீட்டுக்குச் சென்றார்.

நண்பரும், “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா!'’ என்னும் அருணாசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகக் கீர்த்தனையைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து சில நாட்களாக அதே பாடலைத்தான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

இசைப் பாடல் கற்றுக்கொள்ள வந்தவர் துணுக்குற்றார். மறைமுகமாக, தன்னுடைய ஜாதியைக் குறிப்பிட்டு, கிண்டல் செய்வதாக அவர் எண்ணிக் கொண்டார்.

மறுநாள் கவிஞரிடம் வந்து, ‘’என்னங்க, பாட்டுக் கற்றுத்தரச் சொன்னால், ’'ஏன் பள்ளி கொண்டீர் ஐயா,’' என்று சொல்லி என்னைக் கிண்டல் செய்கிறார்’' என்று கூறி வருத்தப்பட்டார்.

“நாளை போகும்போது அவர் தொடங்கியவுடன், ’'எட ராமசாமி தூதுவனே!’' என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிரு" என்று ஆலோசனை சொல்லிக் கொடுத்தார் கவிஞர்.

மறுநாள் அவர் தொடங்கியதும், இவர் திருப்பி, "எட ராமசாமி தூதுவனே’' என்று கூறத் தொடங்கினார்.

பாடல் பயிற்சி அத்துடன் முடிவடைந்தது.