பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஒரு சிறுவனின் காற்ருடிக்கு வால் போதவில்லை. உடனே அந்தச் சிறுவன் தன்னுடைய கோவணத்தைக் கிழித்து, அந்தக் காற்ருடிக்கு வால் கட்டி பறக்க விட்டான். “s - காற்ருடி உயரப் பறந்து கொண்டிருக்கையில் அருகில் இருந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள தங்கக் கலசத்தில் அந்தக் கோவணம் சுற்றிக்கொண்டது. உடனே அந்தச் சிறுவன், அருகில் இருந்த தன் தோழர்களிடம், "அதோ, என் கோவணம் தங்கக் கலசத்தின்மேல் சுற்றிக் கொண்டது பாருங்கள்!' என்று பெருமையாகக் கூறின்ை. அதைப் பார்த்த கவிஞர் அதற்கு ஒரு உவமை கூறினர். சொந்தமாக நூல்கள் எழுத வகையறியாத சிலர், வேண்டாதவற்றை மொழி பெயர்த்தும், பழமையான நூல் களான தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் கம்பராமாயண்ம் போன்ற பெரிய நூல்களில் “பதிப்பாசிரியர்' என்ற முத்திரை போட்டு வருகிருச்கள் அல்லவா? அதற்குத்தான் “என் கோவணம் தங்கக் கலசத் தின்மேல்!" என்று கூறுகிருர், நகைச்சுவையோடு கூடிய உவமை! 16 கவிஞரின் வெறுப்பு கவிஞரிடம் பலர் வருவார்கள்; பேசுவார்கள். கருத் துள்ளவற்றைக் கவனமாகக் கேட்பார்; பதில் கூறுவார்; சொல்லும் பொருளையும் சொல்லக்கூடியவரையும் கவனிப் பார். சில சமயம் கிண்டலாகப் பதில் அளிப்பார்; சில சமயம்