பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஒரு முறை, சென்னை நகர நீதிமன்ற அலுவலகத்தில் நுழைந்து, அங்கு இருந்த குமாஸ்தாவிடம், ஏதோ விவரம் கேட்டார் கவிஞர். பதில் சொல்லத் தெரியாமல் குமாஸ்தா விழித்தார். * . . "இங்கே, உமக்கு மேல் பெரியவர் யார்? அவரிடம் போய் கேட்டுக்கொள்கிறேன்' என்ருர் கவிஞர். குமாஸ்தா நடுநடுங்கி விட்டார். சற்று தொலைவி. லிருந்த புலவர் நாகராஜன் எழுந்து வந்து, கவிஞருக்கு வணக்கம்.கூறி, உட்காரச்சொல்லி, கவிஞரின் கேள்விக்கு விளக்கம் கூறி, உபசரித்தார். புலவர் நாகராஜன் கவிஞரின் ரசிகர் என்பதைக் கூறவும் வேண்டுமோ? சந்தேகமா? பல ஆண்டுகளுக்கு முன் மதுரையின் கடைத் தெரு வில் கவிஞர், மன்னர் மன்னன், நான் மூவரும் போய்க் கொண்டிருந்தோம். - . குழந்தையைப் போல் ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டு நடு வீதியில் கவிஞர் நடந்து கொண்டிருந்தார். 'திண்டுக்கல் பூட்டு இங்கு விற்கக் கூடும்" என ஒரு பெயர்ப் பலகை. மற்றும் பல கடைகளிலும் இப்படியே “விற்கக் கூடும்' என்றே எழுதியிருந்தது. "அதென்னப்பா, விற்கக் கூடும் விற்காமலும் இருப் பார்களா? சந்தேகமாக எமுதியிருக்கிருர்களே' என வியப் போடு கேட்டார் கவிஞர்.