பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 'இப்போதைக்கு சாகமாட்டேன்' என பதில் வந்தது கவிஞரிடமிருந்து. - இருவருக்குமே ஒருவருக்கொருவர் பிடிக்காது. கொள்கை வேறுபாடுகள். சம்பிரதாயத்துக்காக ராஜாஜி. கேட்டுவைத்தார். கவிஞரோ தன் உள்ளக் குமுறலைக் காண்பித்து விட்டார். 38 துரக்கக் கலக்கம் சென்னையிலிருந்து கவிஞரும் வில்லியனூர் விவசாயி ஒருவரும் இரவு ரயிலில் திருச்சிக்குப் பிரயாணமாளுர்கள். - வண்டி விழுப்புரம் வந்து கின்றது கவிஞருக்கு அசதி, தாக்கக் கலக்கம். “இறங்கு, இறங்கு” என்று கூறி, கவிஞர் ரயிலிலிருந்து இறங்கிவிட்டார். வில்லியனூர்க் காரரும் பெட்டியைத் துரக்கிக் கொண்டு இறங்கிவிட்டார். கவிஞருக்கு தூக்கம் தெளிந்தது. சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு நடந்தார். ரயில் புறப்பட்டு விட்டது! “இது விழுப்புரமுங்க!' என்ருர் வில்லியனூர்க்காரர். "இதை ஏன் அப்பொழுதே சொல்லல?" என கடிந்து கொண்டார் கவிஞர். - , - . - - விழுப்புரத்தில் ஏதோ அலுவல் முன்னிட்டு கவிஞர் இறங்குகிருர் என்று கருதிவிட்டார் வில்லியனூர்க்காரர். பிறகு, அடுத்த ரயிலில் ஏறி திருச்சிக்குச் சென்ருர்கள்.