பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எதற்குமே தம்பி என்றுதான் கூப்பிடுவார். தம்பி" யைத்தான் கேட்பார் கவிஞர். மன்னர் மன்னனுக்கு திருமணம் ஆயிற்று; சிலகாலத் துக்குப் பிறகு, குடும்பத்தில் மனவேறுபாடு காரணமாக, மகனவியை அழைத்துக்கொண்டு வெளியேறி, வேறு வீட்டில் குடித்தனம் கடத்த நேரிட்டது. கவிஞர் விட்டுக்கு வந்த அன்பர் சுற்றுமுற்றும் பார்த் தார். தம்பியைக் காணவில்லை. 'தம்பி எங்கே?' என்று கவிஞரிடம் கேட்டார் அன்பர். "அவர் இப்பொழுது சுயேச்சையாக இயங்குகிருர்' என்று சுருக்கமாக, அழகாகக் கூறினர் கவிஞர். மற்றவர்களுக்கும் கவிஞருக்கும் உள்ள வேறுபாடு இதுதான் கவிஞர் மிக சுருக்கமாக அழகாகக் கூறிவிட் டார். மற்றவர்களானல், ஏதேதோ கூறி விவரிப்பார்கள், கேட்பதற்கு சங்கடமாகவும் இருக்கும். 44 தலை வலியா 2 தினப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார் கவிஞர். அதில், 'உங்களுக்குத் தலைவலியா' என்னும் தலைப்பில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த கவிஞர், 'ஆமப்யா' என்று கூறிவிட்டு, 'இதைப் படிப்பதனால் தலைவலிதான் வரும்!” என்று தனக்குள் கூறிக்கொண்டார். . . ."