பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 உங்களுக்கு குஷ்டமா? மற்ருெரு நாள், கவிஞர் தினப்பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, 'உங்களுக்கு குஷ்டமா?" என்ற விளம்பரத்தைப் படித்து விட்டு, "இல்லேப்பா!' என்று தானகவே கூறிக்கொண்டார். கவிஞர் எதிலும் நகைச்சுவை காண்பவர். 46 அன்று ஏன் ? திருமண அழைப்பு இதழ் ஒன்று கவிஞருக்கு தபாலில் வந்திருந்ததை எடுத்துப் பார்த்தார். அதில் 14.9-1944 திங்கட்கிழமை அன்று...எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, " அன்று' என ஏன் போடவேண்டும்? ‘அன்று' என்ருல் அல்ல' என்ற ஒரு பொருளும் உண்டு. இரு பொருள் தரக்கூடிய சொற்களை உபயோகிக்கக் கூடாது' என்று கூறினர் கவிஞர். - பெரும்பாலான அழைப்பு இதழ்களில் தேதி, கிழமை யைத் தொடர்ந்து அன்று' என்ற சொல்லும் காணப்படும். இன்றும் கூட அன்று' என்ற சொல்லை அழைப்பு இதழ்களில் பார்த்தவுடனே கவிஞர் கூறியது எனக்கு நினை வுக்கு வந்துவிடும். 47 பலமொழிக் குழப்பம் பல மொழிகள் கற்ற புலவர் ஒருவர். அவருக்குப் பன் மொழிப் புலவர்'என்ற பட்டம் வேறு ஆல்ை, அந்தப் பன் மொழிப்புலவரின் பேச்சிலோ, எழுத்திலோ தெளிவு