பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இருக்காது. அதற்கு மாருகக் குழப்பமே மிகுதியாக இருக்கும். - கவிஞர் எதிலும் தெளிவுடையவர் சுருக்கமாக, தெளி வாக, அழகாகக் கூறக் கூடியவர். குழப்பமான சொற்களே அறவே வெறுக்கக் கூடியவர். ஒரு சமயம் பலருடன் பேசிக் கொண்டிருக்கையில், “அதிகமான மொழிகளைக் கற்ருலே குழப்பம்தான் உண்டாகும். அதற்கு நம்முடைய பன்மொழிப் புலவரே சான்று' என்று குறிப்பிட்டார் கவிஞர். “பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்ற தவர்' என்னும் குறளே அடிக்கடி கூறுவார் கவிஞர். 48 செங்கல்லே வைத்து அடுக்குவதா ? பெரும் புலவர் ஒருவர், “தொல்லைத் தமிழ் வளர்க்கும் முல்லை முத்தையா...' என்று தொடங்கி, ஒரு வெண்பா எழுதியிருந்தார். (வெண்பா முழுவதும் கினேவு இல்லை; 1945-ல் அந்தப் புலவர் அனுப்பியிருந்தார்) - - கவிஞரிடம் அந்த வெண்பாவைக் காண்பித்தேன். "புலவர்கள் பாட்டு எழுதினால் கொத்தனர் செங்கல்லே வைத்து அடுக்குவது போலிருக்கும்; இதல்ைதான், புலவர் கள் கவிதை எழுதக்கூடாது என்று சொல்லுகிறேன்; மேலும், ஒரு சொல் இரு பொருள்பட எழுதக்கூடாது' என்ருர் கவிஞர்.