பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? 'தொல்லை' என்பது பழமையையும் குறிக்கும்; "தொந்தரவு என்பதனையும் குறிக்கும். - 49 சிவபதவிக்கு வருந்தலாமா ? காட்டுக்கோட்டைச் செட்டியார்களிடையே, யாரேனும் இறந்து விட்டால், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதமூலம் அந்தச் செய்தியை தெரிவிக்கும் போது, "இறந்து விட்டார்கள்', 'காலமானர்கள் என்று குறிப் பிடாமல், சிவலோகபதவி அடைந்து விட்டார்கள் எனக் குறிப்பிடுவது வழக்கம். - ஒரு சமயம் கவிஞரும் மற்றும் சிலரும் பேசிக் கொண்டிருக்கையில், செட்டியார் நண்பர் ஒருவருக்கு, “...சிவலோகபதவி அடைந்து விட்டார்கள்' என்று தெரிவிக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்று வந்திருந்தது. அதைப் பார்த்ததும் அவர் வருத்தத்தோடிருந்தார். வந்திருந்த கடிதத்தை வாங்கிப் பார்த்து விட்டு, “சிவ லோகபதவி என்பது நல்ல பதவித்ானே? அதற்கு ஏன் வருந்த வேண்டும்?" என்ருர் கவிஞர். - அருகில் இருக்தோர் வருத்தம் மறைந்து, சிரித்தனர். 50 இந்தப் பொருளைப் பாருங்கள் ! ஏதேனும் ஒரு பொருளை வாங்கிவரச் சொன்னல், அதன் விலை எவ்வளவு? ஏன். இவ்வளவு அதிகவிலே கொடுத்தாய்?' மீதம் எங்கே? . இம்மாதிரி நச்சரிப்பு எல்லாம் கவிஞரிடம் கிடையாது. ஆனால், வாங்கிவந்த