பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பொருள் மட்டும் கவிஞர் விரும்பியபடி இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டால், அதன் அழகில் லயித்து விடு வார். அவர் விரும்பியபடி அந்தப் பொருள் இல்லாவிட் டாலோ, வாங்கி வங்தவர் அவர் எதிரில் கிற்க முடியாது. சில சமயங்களில், "இவர் வாங்கி வந்திருக்கிருர், பாருங்கள்' என்று அருகில் இருப்பவர்களிடம் காண்பிக்கத் தொடங்கி விடுவார். பொருளே வாங்கி வந்தவருக்கு வெட்கமாகிவிடும். 51 ரகசியச் செய்தி ஒரு சமயம் புதுச்சேரி கடற்கரையில் கவிஞர், ஒரு வழக்கறிஞர், ஒரு நீதிபதி மூவரும் உரையாடிக் கொண்டி ருந்தனர். - வழக்கறிஞர் அப்பொழுது சென்னே நகரின் தோற்றம், கடற்கரை, உயர்நீதி மன்றக் கட்டடம், சட்டமன்றம், இப்படியாக வர்ணித்துக் கொண்டிருந்தார். கவிஞரும் அதை ஆமோதிப்பதைப் போல் தலையசைத்தபடி இருந்தார். நீதிபதி கவிஞரின் காதில், “சென்னையைப் பற்றிய பேச்சை நிறுத்திவிடுங்கள். நான் சென்னைக்குப் போனதும் இல்லை; பார்த்ததும் இல்லை' என்று ரகசியமாகக் கூறினர். “சரி, அப்படியே சைக்கிளைப் பற்றிய பேச்சு தொடங்கிலுைம் அதை நிறுத்தி விடுங்கள்' என்ருர் கவிஞர் நீதிபதியிடம். நீதிபதிக்கு சென்னை நகர் தெரியாது! கவிஞருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது!