பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விளக்கெண்ணெய் வேண்டாம்! இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கவிஞருக்கு பேதிக் காக விளக்கெண்ணெய் கொடுப்பது வழக்கம். உணவு, மருந்து முதலானவற்றில் பழகி அம்மாள் மிகவும் எச்சரிக் கையாக இருப்பார். முதல் நாள் இரவே வாதநாராயண இலைகளைக் கொண்டுவரச் செய்து காய்ச்சி விளக்கெண் ணெயை ஊற்றி தயாரித்து வைத்துவிடுவார். - ஒரு நாள், முறைப்படி தயார் செய்ததை எடுத்துக் கொண்டு கவிஞர் இருக்கும் இடத்துக்கு வந்தார் பழகி அம்மாள். விளக்கெண்ணெய் காற்றம் கவிஞரின் மூக்கைத் துளைத்தது. . கவிஞர் வயிற்றைப் பிசைந்து கொண்டே, “பழகி அம்மா, இன்றைக்கு வயிறு சரி இல்லை; இன்றைக்கு வேண்டாம்' என கெஞ்சும் தோரணையில் கூறினர். அவரோ விடுவதாக இல்லை; கட்டாயப்படுத்தி குடிக்கும் படி வற்புறுத்தினர். கவிஞரோ வேண்டாம் என மன்ரு டிஞர். "பின்னே, காய்ச்சிய எண்ணெயை என்ன செய்வது?" என சிறிது கடுமையாகக் கேட்டார். அவ்வளவுதான், “பிள்ளைகளா, இங்கே வாங்க' என எல்லோரையும் அழைத்து, அவர் குடிக்க வேண்டிய எண்ணெயை அவர்களேக் குடிக்கச் செய்து விட்டார்.