பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

"ஷேக்ஸ்பியர் இயற்றிய நூல்களைக் காட்டிலும் ஷேக்ஸ்பியரைப்பற்றிய நூல்கள் அதிகமாக வெளி வந்துள்ளன'’ என்று கூறுவார்கள். அதைப் போலவே பாரதிதாசனைப்பற்றியும் நூல்கள் ஏராளமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஆய்வு நூல்கள் பல. ஆய்வு நூல்கள் அனைத்தும் ஆய்வு நூல் எழுதுவோருக்கே பயன்படுமே தவிர, சராசரி வாசகர்களுக்குப் பயன்படுமா?

பாரதிதாசன் கவிதைகளைப் பற்றிய விமர்சன நூல்கள் விரிவாக வெளிவர வேண்டும் என்பது என் கருத்து. அதுவே முழுமையான நிறைவைத் தரக்கூடியது.

பாவேந்தரின் கவிதை வெள்ளத்தில் நீந்தியவர்கள் நால்வர். திருவாளர்களான சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள், கவிஞர் த. கோவேந்தன் அவர்கள், புலவர் இராமநாதன் அவர்கள், பேராசிரியர் இளவரசு அவர்கள் ஆகியவர்களே அந்த நால்வர். இவர்கள் பல ஆண்டுகளாக பாவேந்தரின் கவிதைகளோடு ஒன்றி இணைந்தவர்கள்.

இந்த நால்வரில் புலவர் இராமநாதன் அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார். மற்ற மூவரும் இதுவரை விரிவாக எழுதவில்லை. அவர்கள் எழுதினால் அவையே முழு நிறைவைத் தரும்.

விமர்சன நூல்களைப் போலவே விரிவான வாழ்க்கை வரலாற்று நூலும் வெளி வரவேண்டும். ஒருவர் மட்டுமே எழுதிவிட இயலுமா? அதுவும் பாவேந்தர் மகன் மன்னர்