பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் விழா புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் கவி அரசர் என்றும் போற்றிப் புகழப்படும் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் விழாவை தமிழகத்தின் த&லநகரமாகிய சென்னையிலும் ஏனைய மாவட்டத் தலைநகர் களிலும் அரசு மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. - சென்தின்யில் கலேவாணர் அரங்இல் பாவேந்தரின் விழா ஏப்ரல் 29இல் காலே 8.30 மணிக்கு குடந்தை சீனிவாசன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆகியது. தமிழ்நாடு அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர், திரு. து. மு. காளியப்பா வரவேற்புரை கூறினர். விழாவைத் துவக்கி வைத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். - - - அடுத்து உவமைக் கவிஞர் திரு. சுரதா அவர்களின் தலைமையில் பாவேந்தர் படைத்த பாத்திரங்கள்' என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. - கவிஞர் புலமைப்பித்தன்,கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் இளஞ்செழியன், கவிஞர் முத்துராமலிங்கம், கவிஞர் பனப்பாக்கம் சீத்தா, கவிஞர் செங்கை பொதுவன், கவிஞர் அரசு மணிமேகலை ஆகியோர் கவிதைகளே அரங் கேற்றினர். பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதி மாண்புமிகு க. இராசாராம் அவர்கள் தக்லமை யில் கருத்தரங்கம் நடைபெற்றது. 4 -