பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாவேந்தர் நூல்களை முதன் முதலில் சிறப்பாக வெளி யிட்டமைக்காக திரு. முல்லே முத்தையா அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசையும் சான்று இதழையும், பட்டாடை யையும் மாண்புமிகு கல்வி அமைச்சர் வழங்கினர். நிறைவு விழாச் சொற்பொழிவை மாண்புமிகு கல்வி அமைச்சர் நிகழ்த்தினர். நிறைவு விழாச் சொற்பொழிவுக்குப் பின்னர் செய்தி. மக்கள் தொடர்புத் துறை ஆய்வு அலுவலர் திரு. சி. நல்லரசு நன்றி கூறினர். - அதன் பின்னர், அரசுக் கலைஞர் கலைமாமணி திருமதி வைஜயந்திமாலா பாலி அவர்கள் பாவேந்தரின் பாடல்களுக் கான நாட்டிய கிகழ்ச்சியை நிகழ்த்தினர். - இன்னிசையுடன் துவக்கம் ஆகிய விழா இயற்றமிழின் துணையுடன் நாடக (காட்டியத்) தமிழுடன் நிறைவு பெற்று விழாவுக்கு வந்திருந்த மக்களின் நெஞ்சங்களில் கிறைந்து, இன்னும் எதிரொலியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது! 1 தலைமை உரை திரு. க. இராசாராம் பாரதிதாசன் வாழ்ந்த காலம், கவிஞர்கள் கடவுளைப் பற்றியே பாடி வந்த காலம்; மனிதனேப் பாடுவதற்குப் பயப்பட்ட காலம். அத்தகைய சூழ்நிலையில் ஆடு மேய்ப் பவனேக் குறித்து, வண்டிக்காரனேக் குறித்து, தொழி லாளரைக் குறித்து, முறம் பின்னும் பெண்ணேக் குறித்து, பாவேந்தர் எழுதினர் என்ருல் அது போற்றத் தகுந்த செயல்; மனிதாபிமானத்தின் அடிப்படையில் அமைந்த செயல்.