பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பாவேந்தர் குடும்ப விளக்கிலே விருந்தோம்பல் பகுதியில் சைவ உணவைக் குறிக்கிருரே தவிர அசைவ உணவைக் குறிப்பிடவே இல்லை. அவர் அசைவ உணவுப் பிரியர்தான் என்ருலும் நூலில் சைவ உணவைப்பற்றியே சொல்லி வருகிருர். குரங்கின் விளையாட்டை அவர் மிக அழகாக எடுத்துக் கூறுகிருர். ஆலினைக் காற்று மோதும் அசைவனே எனச் சிரித்த, பாரதிதாசன் இயற்கையோடு இயைந்தவர் என்ருலும் அவர் மனித சமுதாயத்துக்கு என்னென்ன சொன்னர் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறும் கற்பனைத் தேர் ஒட்டுவதால் பயன் கிடையாது என்பதை அவர் அறிந்திருந்தார். பொதுவாக/புலவர்கள் கழுகுப் பார்வை கொண்ட வர்கள். அதாவது ஆழமான பார்வையுடையவர்கள் என்பதை மட்டும் இங்கே குறிப்பிடவில்லை; கல்லதைக் காணுது கெட்டதையே காணும் பார்வை கொண்டிருக் தார்கள். ஆல்ை, பாவந்ேதர் அவர்களில் வேறுபட்டிருக் தாா. தெய்வப்பாடல் எழுதிய அக் காலக் கவிஞர்களுக்கு இயற்கை தெய்வமாகத் தெரிகிறது. கறுப்பு வானம் திருமாலின் வடிவமாகத் தெரிகிறது ஒரு கவிஞருக்கு. ஆல்ை, பாவேந்தர்க்கு அப்படித் தோன்றவில்லை. கேள்வி இல்லார் நெஞ்சம் போல் இருண்டு காணப் படுகிறது வானம்' என்று குறிப்பிடுகிருர்.