பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று பாரதியார் குறிப்பிட்டார். பின்னர் வ்ந்த பாரதிதாசன், வன்மை உயர்வு மனிதர் தவமெல்லாம் பெண்மையில்ை உண்டென்று பேசவந்த பெண்ணழகே நாயென்று பெண்ணை நவில்வோர்க்கும் இப்புவிக்குத் தாயென்று காட்டி தமிழர்க்கு வாய்த்தவளே! என்ருர், பாவேந்தர் இந்தக் காலச் சமுதாயத்தில் இருந்து வேறு படுகிருர், பெண்மைக்கு உயர்வு கொடுக்க விரும்புகிரு.ர். “பகுத்துண்டு பல லுயிர் ஒம்புதல் என்ருர் வள்ளுவர். காரல் மார்க்ளின் (Capital) நூல் உருவாவதற்கு முன்பே உருவாகியது குறள். - ' எல்லார்க்கும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ' என்ருர் கம்பர். "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் செகத்தின அழித்திடுவோம்' என்ருர் பாரதியார். இதே பொது வுடமைத் தத்துவத்தை பாரதிதாசன் உலகப்பன் மூலமாகப் புதுமையாக எடுத்துரைத்தார். - 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்'என்ருர் வள்ளுவர். "சாதி இரண்டொழிய வேறு இல்லை என்ருர் ஒளவையார். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் கூட, 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் நூலளவா குமாம் நுண்ணறிவு குலத்தளவே ஆகுமாம் குணம் என்று குறிப்பிடுகிறது.