பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பாவேந்தர் கண்ட தமிழ் உணர்வு தத்துவ மேதை டி. கே. சீனிவாசன் உரைச் சுருக்கம் காலத்தை உருவாக்கிய கவிஞர்கள் பாரதியும் பாரதி தாசனும். மற்ற கவிஞர்கள் எல்லாம் காலத்தால் உரு வானவர்கள், . பாரதி பூகோளத்தைப் பாடினன். பாரதிதாசன் காலத்தைப் பாடினன். பாரதி ஆவேசத்துடன் பாடினன். பாரதிதாசன் அறிவோடு பாடினன். பாரதி சிந்து நதி மிசை நிலவினிலே என்று பாடி குனே அதன் பொருள் என்ன? அவன் திராவிடப் பண் பாட்டை வலியுறுத்துகிருன் என்றே எனக்குத் தோன்று கிறது. - பாரதி தோணியிலே போகிருன். சேரநாட்டு இளம் பெண்ணே அருகிலே வைத்துக்கொள்கிருன்; பாடுவதற்கு சுந்தரத் தெலுங்கை வைத்துக்கொள்கிருன். ஆல்ை, அவன் தோணி விடுவதற்குத் தேர்ந்தெடுத்த நதி எது தெரியுமா? கங்கை இல்லை, யமுனே இல்லே, சரஸ்வதி இல்லை. அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டது சிந்து கதி சிந்து நதியில்தான் திராவிட கலாச்சாரம் தோன்றியது என்பது வரலாற்று உண்மை! எனவேதான் பாரதி திராவிட உணர்வின் அடிப்படையிலே கவிதை பாடின்ை. "முட்டாள்களும் பாடுவார்கள் கடவுள் பாடல்' என்ருர் பாரதிதாசன். காதலைப் பற்றியும் முட்டாள் கூடப்