பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கிருன் என்ருல் அது பாரதிதாசன் ஒருவரே என்று அறுதி யிட்டுக் கூற முடியும். இவருக்கு முன்னல் கவிஞர்கள் தமிழ் காட்டில் இருந்த தில்லயா? இவருக்கு முன்னல் தமிழ் நாட்டில் கவிதைகள் பாடப்பட்டதில்லையா? உங்கள் எண்ணத் தேரைக் கொஞ்சம் பின்னுேக்கிச் செலுத்த வேண்டுகிறேன். பன்னிரண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன் மார்கள் பாடிய திருமுறைகள்-திவ்வியப் பிரபக்கங்கள் எல்லாம் இருந்திருக்கின்றன. அவர்கள் எல்லோரும், புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே மறவாதிருக்க வரம் வேண்டும்' என்று வேண்டினர்கள். எல்லாவற்றையும் கடவுள்களாகக் கண்டனர் அவர்கள். கடவுள், காதல் என்ற இரு பொருள்களை மட்டுமே அக் காலத்துக் கவிஞர்கள் சிறப்பித்துப் பாடிக் கொண்டி ருந்தார்கள். கோவை, மடல், தாக போன்ற சிறு பிரபந்தங்களைப் பாடி, அவற்றின் மூலமாக காதலுற்ற தலைவிகளின் துன்பங்களே எடுத்துக் கூறி வந்தார்கள். இந்த நிலையை மாற்ற இருபதாம் நூற்ருண்டில் இரு கவிஞர்கள் தோன்றினர்கள். பாரதியும் பாரதிதாசனும் தான் அந்த இரு கவிஞர்கள்.