பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கைப் பாசிகளும், மூடப் பழக்க வழக்கங்கள் என்ற முடை காற்றங்களும் தமிழ் கிலத்தினின்றும் அடித்துக் கொண்டு போகப்பட்டன. அதற்காக அவருக்குத் தமிழ் உலகம் நன்றி செலுத்தக் கடப்பாடு உடையது. பண்டைக் காலத்திலே, நம் காட்டிலே பல தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளும் பிற குறிப்புகளும் இப்பொழுது நமக்குக் கிடைத்தில. அக்காலத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் இதில் அக்கறையும் செலுத்தவில்லை. ஆனல், ஒர் இருவர் விநோத ரச மஞ்சரி' என்ற உரை நடை மூலமும், 'தனிப் பாடல் திரட்டு என்ற தமிழ்ச் செய்யுள் கோவை மூலமும், சில குறிப்பிடத்தக்க புலவர்களின் சுவையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவைதான் நாம் அறியும் தமிழ்ப் புலவர் சரித்திரங்கள். நம் முல்லே முத்தையா அவர்கள் இது போன்ற குறை இனி ஏற்படா வண்ணம், பகுத்தறிவின் ஒளியாய் விளங்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றில் சில சுவையான நிகழ்ச்சிகளை தாம் நேரில் கண்டறிந்தவாறு மிக்க இனிய எளிய நடையில் எழுதி உதவியிருக்கின்ருர். * . -. அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசைேடு பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியவராதலால், அவருடைய வாழ்க் கையில் நிகழ்ந்த சில சுவையான நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுவதற்கு அவர் மிகவும்:பொருத்தமானவரே! அறிஞர் மே. சக்கரவர்த்தி கயினர்.