பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திரு. வி. ஆர். எம். செட்டியார் அவர்கள், ஸ்டார் பிரசுரத்தின் மூலம் ச. து. சு. யோகியாரின் நூல்களே வெளி யிட்டார். மேற்கண்ட நான்கு கவிஞர்களின் நூல்களையும் வெளி யிட்டோர் செட்டிநாட்டைச் சேர் ங் த நகரத்தார் சமூகத்தினரே. பாரதிதாசனே ஒரு சாரார் எந்தக் கண்ணுேட்டத்தில் பார்த்தனரோ அப்படியே என்னையும் பார்க்கத் தொடங் கினர்கள். அப்பொழுது, "நம்ம பையன்தான் பாரதிதாசன் நூல்களே வெளியிட்டு வருகிருளுமே, அவன் ஏன் இதைச் செய்கிருன்?' என பண்டிதமணி கதிரேசச் செட்டியார். அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டார். “முத்தையா, கவி போதும்; நமக்குக் கட்சி வேண்டாம்!' என தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் அறிவுறுத்தினர் என்னிடம். தமிழ்க்கடல் ராய. சொ.வும், கம்பன் புகழ் கூவும் சா. கணேசனும் கூட அந்தக் காலத்தில் கவிஞருககு எதிர்ப்புக் காட்டினர்கள். அந்த காளில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கொள் கையில் உறுதி இருந்தது. லட்சிய ஆர்வமும் மிகுந் திருந்தது. பதிப்பாளர்கள் கூட வியாபார கோக்கோடும் நூல் கிலேய விற்பனையைக் கருதியும் புத்தகங்களை வெளியிட்ட தில்லை.