பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 “...ஒரு பரம்பரையை உண்டுபண்ணக்கூடிய வல்லமை உடையதாக இருத்தல் வேண்டும். ஒரு மனிதனுடைய தனியளவில் நின்று விட்டால் போதாது; பொதுமக்கள் அதை அங்கீகரித்தல் வேண்டும். அப்பொழுதுதான் அது டிேத்த பயனைத் தரவல்லது. பாரதிதாசனுடைய புரட்சி புதுமையாக உள்ளது. ஆற்றல் வாய்ந்தது. இவ்விரண்டு ஆற்றல்களும் நன்ருகப் புலப்படுகின்றன. இப்புரட்சியால் உண்டாகும் விளைவை எதிர்காலம்தான் மதிப்பிடுதல் வேண்டும்" என பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், பாரதிதாசனேப் பற்றி 19460ல் எனக்கு எழுதி யிருந்தார். சில ஆண்டுகளிலேயே பொதுமக்கள் பாரதிதாசனே அங்கீகரித்ததோடு ஒரு பரம்பரையே உருவாகியுள்ள வல்லமையையும் காண்கிருேம். தமிழ் காட்டில் மட்டும் அல்லாமல் கடல் கடந்தும், தமிழ் பேசும் தமிழர்கள் வாழும் மாநிலங்களில் எல்லாம் பாவேந்தர் புகழ் பரவியது. - “......இங்காட்டில் உண்மைத் தமிழர் தலையெடுக்கும் காலத்தில் இவர்க்கு உருவச்சிலே எடுப்பர்' என சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் 1946:ல் எனக்கு எழுதியதில் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தச் சொல்லின் செல்வரின் சொல் தீர்க்கதரிசன மாகியது அறிஞர் அண்ணு அவர்கள் இந்த நாட்டின் முதல் அமைச்சராக வீற்றிருந்து ஆட்சி புரிந்தபோது, 1968உலகத் தமிழ் மாகாட்டில் பாரதிதாசனுக்கு உருவச்சிலே கடற்கரையில் கிறுவிப் பெருமைப் படுத்தினர். பின்னர் புதுவை அரசினர் புதுவையில் கவிஞருக்குச் சில்காட்டி, நினைவு மண்டபம் எழுப்பி, கவிஞர் வாழ்ந்த