பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுவைக்க வாருங்கள்

1972ஆம் ஆண்டு ஒருநாள் தோழர் அவ்வை நடராசன், பேரறிஞர் நீ. கந்தசாமி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து 'பாவேந்தரின் பற்ருளர்' என்றார்.

தமிழ்ப் பெருமிதத்தின் தன்னிகரற்ற உருவமாக விளங்கிய நீ. க. 'அப்படியா! மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு காலத் தொடர்பு? என்ருர் என்னைப் பார்த்து. 1945, லிருந்து தெரியும். 1948லிருந்து நெருங்கிய பழக்கம்’ என்று கூறினேன். உள்ளே சென்று இரண்டு நூல்களைக் கொண்டு வந்தார். ஒன்று 'பள்ளியகரப் பழங்கதை’, மற்ருென்று தாமசு கிரே என்ற ஆங்கிலப் புலவன் எழுதிய 'இரங்கற்பா'.

முதல்நூல் மிக மிகச் சிறியது. பழைய இலக்கியங்களின் பேரால் நடைபெறும் போலி இலக்கியவாணர்க்கு ஒர் அறைகூவல்போல் எழுதப்பட்ட நையாண்டி இலக்கியம். நகைச்சுவையின் சுரங்கம். அதைப் பார்த்துக் கொண்டே பாரதிதாசன் அவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஒரிரண்டைக் கூறினேன்.

நீ. க. உடனே, "ஒன்று தெரியுமா? ஒருமுறை இரசிகமணி டி. கே. சி. இராமாயணப் பதிப்பு பற்றி பாரதிதாசனிடம் பேசிக்கொண்டிருந்தேன். உடனே பாரதிதாசன் இராமனின் வாழ்வைக் கெடுத்தவள் கைகேயி; இராமாயணத்தின் வாழ்வைக் கெடுத்தவர் டி. கே. சி. என்று கூறி’ பூசணிக்காய் மகத்துவ’ப்பாடலான காய் வண்ணம் அங்குக் கண்டேன், கறிவண்ணம் இங்குக் கண்டேன்’ என்ற பாடலையும் கூறினாராம்.” இதுபோல் நிகழ்ச்சிகள் பல கூறினார் நீ க. ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேதனையிலிருந்து எழுந்தவையே தவிர சினத்திலிருந்து சீறிச்சிலிர்த்தவையல்ல,