பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அவருடைய கோபமானது அனுதாபமாக மாறிவிடுவதும் உண்டு. அது பிறவியில் உண்டான கவிஞர் இயல்பு போலும். எதிலும் அவர் போக்கும் இயல்பும் தனிச் சிறப்புடை யன. அதல்ைதான் அவர் புரட்சிக் கவிஞராய், பாரோர் புகழும் பாவேந்தராய்த் திகழ்ந்தார். ஒரே இடத்தில் வெகு நேரம் உட்கார்ந்து கொண் டிருக்க விரும்பமாட்டார். பலர் சூழ, வெளியே போய் வருவதில் அவருக்குப் பிரியம் அதிகம். சில சமயங்களில், அருகில் இருப்போரைப் பார்த்து, "எல்லோரும் வெளியே போய் வருவோமா' என்று கேட் பார். “சரி” என்றதும் எழுந்து எங்கேனும் சிறிது தூரம் செல்வதும், சில கடைகளில் நுழைந்து எதையாவது வாங்குவதும், பிறகு திரும்பி வருவதும் வழக்கம். சினிமா, நாடகம், மற்றும் பல கிகழ்ச்சிகளுக்குப் போக விரும்புவார். உடனே உடை மாற்றிக்கொண்டு எல்லோருக்கும் முதலில் புறப்படத் தயாராக நிற்பவர் கவிஞர்தான் மற்றவர்களும் உடன் வருவதற்காக காத்துக் கொண்டும், சிறு பிள்ளையைப் போல் மகிழ்ச்சி ததும்ப உலா விக்கொண்டும் இருப்பார். பாரதியாரைப் பற்றி சுவையான நிகழ்ச்சிகளைக் கவிஞர் கூறும்போது மணிக்கணக்கில் ரசித்துக் கொண் டிருக்கலாம். அவ்வாறு பலமுறை கேட்டு ரசித்தவர்கள் பலர். எவ்வளவு முறை கேட்ட போதிலும் சலிப்புத் தோன்ருது. அவ்வளவு ரசனேயோடு அழகாகக் கூறுவார். அடிக்கடி விரும்பிக் கேட்டவர் பலரில் நானும் ஒருவன்! பாரதியார் பாடல்களையும் தம்முடைய பாடல்களையும் பாவேந்தர் பாடினல் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்