பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 கத் தோன்றும். அவருடைய குரலில் இனிமையும் கம்பீர மும் கயமும் கலந்து இன்பமூட்டும். பலமுறை கேட்டு, ரசித்து மகிழ்ந்தோர் பலர். அவற்றை எல்லாம் டேப்பில் பதிவு செய்து வைக்கவில்லையே என்ற குறை இப்பொழுது உண்டாகிறது. படர்ந்த நெற்றி; மீண்ட கழுத்து; உயர்ந்த வெற்றித் தோள்கள்; கூர்மையான ஆல்ை அமைதியான பார்வை, கட்டுக் கோப்பான உடல் அமைப்பு; மொத்த உருவமே வனப்பாகத் தோன்றும். எப்படி அவர் கவிதைக்கு இனே கூற முடியாதோ, அப்படியே அவருடைய உருவ அமைப்புக்கும் இனே இல்லை. - பாவேந்தர் வெளியே புறப்பட்டு விட்டால், மன்ன ரைப் போல அவருடைய தோற்றமும் நடையும் கம்பீர மாக இருக்கும். தெரிந்தவர்கள் கின்று வணக்கம் கூறு வார்கள்; தெரியாதவர்கள் கின்று பார்த்து யார்?' என பிறரிடம் விசாரிப்பார்கள். அத்தகைய தோற்றப் பொலிவு மிக்கவர். விரைவாக நடந்து செல்வார்; சில சமயங்களில் அவருடன் செல்வோர் பின் தொடர்ந்து ஒட நேரிடுவதும் உண்டு. . முகச்சவரம் செய்து கொண்டு முகம் மழ மழப்பாக இருக்கும்; தினமும் சோப்புத் தேய்த்துக் குளிப்பார்; தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவி வாரி விட்டுக் கொள்வார்; முகத்துக்குப் பவுடர் நறுமணம் பூசிக் கொள்ள விரும்புவார். கரை, திரை, மூப்பு அவரை அண்டியதே இல்லை. உள்ளம் இளமையாகவே இருக்கும். பெரும்பாலும் குப்புறப் படுத்துக்கொண்டே கவிதை எழுதுவார். சில சமயங்களில் உட்கார்ந்து எழுதுவதும் உண்டு. - . . . . . . . ."