பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அவர் இயற்றிய கவிதைகளை அவ்வப்போது துணை வியார் பழகி அம்மாள் அவர்களிடம் படித்துக் காண்பிப் பார். அம்மையார் கூறும் திருத்தங்களை ஏற்பதும் உண்டு. இளமைக் காலத்தில் பீடி, சுருட்டு பிடிப்பார் பீடி. பிடிப்பதில் உழைப்பு அதிகம்; பயன் குறைவு என ஒரு முறைகூறினர். அதை விடுத்து, சிகரெட் தொடர்ந்து பிடிக்கத் தொடங்கினர். பாவேந்தரின் பேச்சின் தோரண புதுமையாக இருக் கும். குயில் சிவா, பெரியசாமி, தமிழ் ஒளி, புலவர் நக்கீரன், மன்னர் மன்னன், பாலசுப்பிரமணியம் முதலா னேர் சந்தித்துப் பேசும் பொழுது பாவேந்தரைப் போலவே பேசி மகிழ்வோம். பேச்சின் தொனி, சாயல் அனைத்தும் அப்படியே அமைந்துவிடும். எங்களுக்கெல்லாம் அதுவே பெரிய ரசனையாகத் தோன்றும். கவிஞர் சுரதாவிட ம் அந்தச் சாயல் அப்படியே இருக்கிறது. பாவேந்தர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குயில் சிவாவும் கவிஞர் தமிழ் ஒளியும் மறைந்து விட்ட னர். இப்பொழுது இருப்பவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் கானும் பொழுது பாவேந்தருடன் நெருங்கிப் பழகிய னேவுகளும் பேச்சுகளும் சாயலும் கண்கள் பனிக்க உள்ளத்தில் ஆறுதலே கிரப்புகிறது. “உங்களைக் காணும்போது பாவேந்தர் கினேவு தோன்றுகிறது' என்ருர் கவிஞர் கோவேந்தன் அவர்கள். பேராசிரியர்கள்,எழுத்தாளர்கள், புலவர்கள், கவிஞர் கள் மற்றும் வாசகர்கள் என்னேக் காணும்போதெல்லாம் பாவேந்தரைப் பற்றியும் அவர் கூறியவற்றையும் மிக ஆவலோடு கேட்பார்கள். மகிழ்ச்சி நிறைந்த அந்தப்