பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பசுமையான நினைவுகளையும் பேச்சுகளையும் கினைவுபடுத்தி அவர்களுக்குக் கூறி மகிழ்வதோடு நானும் இன்புறுவேன். எழுத்தில் கிலேயாக இருக்கவேண்டும் என பலரும் வற்புறுத்தினர்கள். அவர்களுடைய வற்புறுத்தலுக்காக முன்னர் நான் எழுதிய கட்டுரையே இது. வளரும் இளக் தலைமுறையினருக்கும் பாவேந்தரைப் பற்றி அறிந்து கொள்ள சிறிதளவாவது உதவும் என எண்ணுகிறேன். -முல்லை பிஎல். முத்தையா 15 எளிமையாகப் பாடியது எப்படி? புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்திருந்த போது, ஒரு நாள் பாரதியார் இல்லாத சமயத்தில் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்த பாரதிதாசன், பாரதியார் மேசை டிராயரைத் திறந்திருக்கிருர். உள்ளே கவிதைகள் எழுதிய காகிதங்கள் பல கிடந்தன. எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் பாரதிதாசன். பாஞ்சாலி சபதம் கவிதைகள் அவை. "அது எழுதப்பட்டிருந்த முறை எனக்கு வியப்பைத் தந்தது. அதன் எளிமையைக் கண்டு திகைத்தேன். அன்று முதல் பாரதியின் எளிமையான நடையைப் பின்பற்ற முடிவு செய்தேன். அந்தக் கவிதைகளைப் படித்திருக்கா விட்டால், நான் இவ்வளவு எளிமையாகக் கவிதைகa எழுத நினைத்திருக்க மாட்டேன்’ என்ருர் பாரதிதாசன். (இந்த நிகழ்ச்சியை கவிஞர் சுரதா அவர்களிடம் கூறி யுள்ளார் பாரதிதாசன். 7. 1. 1968 ஆனந்த விகடன் இதழில் வெளி வந்ததது 6