பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இப்பொழுது வேண்டும் . ஒருசமயம் சென்னையில் பாவேந்தருடன் மன்னர் மன்னனும் கானும் மாலை நேரத்தில் சிற்றுண்டி விடுதிக்குச் சென்ருேம். ~ தோசை கொண்டு வரும்படி கூறினர் பாவேந்தர். வெகு நேரமாகியும் தோசை வரவில்லை. பாவேந்தருக்கோ பசியால் ஏற்பட்ட கோபம். உடனே, "ஏம்பா, தோசை இப்பொழுது சாப்பிடுவதற்காகக் கேட்டேன். கோளைக்குக் கொண்டு வருவாயா?" என்று கூறி எழுந்து விட்டார். 'இதோ எடுத்து வருகிறேன்' என்று கூறி, உடனே போய் தோசை கொண்டு வந்தார். . . . 18 பயமுறுத்தி வைத்திருக்கிருர்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இல்லத்துக்கு ஒரு காள் நாதசுர இசை மன்னர் ராஜரத்தினம் பிள்ளை வந்திருக்கிருர். கவிஞரும் இசை மன்னரும் பேசிக்கொண்டே இருக் தார்கள். இசை மன்னரால் சற்று நேரம் சும்மா இருக்க முடியுமா? அருகில் இருந்த தூணில் ராஜரத்தினம் பிள்ளை விரல்களால் தாளம் போட்டிருக்கிருர், தாளம் போட்ட துாணிலிருந்து வந்த ஒசையைக் கேட்டு "என்ன அது?" என்று கேட்டவாறு வியப்புடன் எழுந்து நின்ற ராஜ ரத்தினம் பிள்ளை, பாரதிதாசனப் பார்த்து 'ஐயய்யோ! இந்தத் தூண் ஆச்சா மரத்தால் செய்தது' என்ருர்,