பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 "ஆச்சாமரத்தை வீடு கட்டப் பயன்படுத்த மாட் டார்கள். ஆச்சா ஆச்சா' என்று கேட்டு ஒரேயடியாக எல்லாவற்றையுமே முடித்துத் தொலைக்கும் என்று சொல்வது வழக்கம். ஆல்ை, ஆச்சா மரத்தால் நாதசுரம் செய்வார்கள்! ஆகவே, அந்த மரத்தை இனம் கண்டு கொண்டார் இசை மன்னர். ராஜரத்தினம் பிள்ளையின் துடிப்பைக் கண்டு சிரித்த பாரதிதாசன், "ஆச்சா மரமா இது. அதுதானே பார்த்தேன். கான் இதன் அருகில் உட்கார்ந்து கவிதை எழுத ஆரம் பித்தால், ஆச்சா ஆச்சா" என்று கேட்கும் போலி ருக்கிறது. நான் சட்டென்று முடித்து விடுவேன்' என்ருர், பிறகு, ஒர் அருமையான விளக்கத்தைக் கூறினர்: "ஆச்சா மரத்தால் நாதசுரம் செய்கிருர்கள். அதை வீடுகளுக்கும் பயன்படுத்தினல், பிறகு நாதசுரம் செய்ய வழியில்லாமல் போய், அந்த இசைக் கருவியே மறைந்து: போகும். அதற்காகத்தான் அந்த மரத்தைப் பற்றி அப்படி பயமுறுத்தி வைத்திருக்கிருர்கள்' என்ருர் கவிஞர். (7. 1. 1968 ஆனந்த விகட னில் வெளிவந்தது.1