உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 5

நாமமும் அமைத்து வழிபட்டார்கள். தியானத்துக்குப் பற்றுக் கோடான அறிகுறிகளும் வழிபாட்டுக்குப் பற்றுக் கோடான திருவுருவங்களும் நாமங்களும் கடவுளை உணரும் அடையாளங்கள். ஒரு வகையில் பார்த்தால் கடவுளாகவே எண்ணி உணர்ந்து இன்புறத் தக்கவை; ஆனல் கடவுளே அல்ல.

மொழியும் எழுத்தும் எப்படி நினைப்பு ஆகாவோ அப்படியே தியானிக்கும் உருவமும் காணும் உருவமும் கடவுள் ஆகா. ஆயினும் மொழியும் எழுத்தும் மனித முயற்சியின் விளைவாக நினைப்பை உணரும் கருவி களாகவும் அடையாளங்களாகவும் எப்படி உதவுகின்ற னவோ, அப்படியே கடவுளின் பெயர்களும் உருவங் களும் கடவுளின் அருளை நுகரும் கருவிகளாகவும் அடையாளங்களாகவும் உதவுகின்றன. கருத்து மனித சாதிக்கே பொதுவாக இருந்தாலும் பேச்சும் எழுத்தும் நாடுதோறும் வேருக இருப்பது போல, கடவுள் ஒருவ ராக யாவருக்கும் பொதுவாக இருந்தாலும் அவருடைய திருவுருவங்களும் வழிபாட்டு முறைகளும் வேறு வேருக இருக்கின்றன. கடவுள் வேறு வேறு அல்ல; கடவுளே அறியவும் உணரவும் வைத்த அடையாளங் களே வேறு வேறு ஆகும். அடையாளங்கள் பலவாக இருப்பதனல் பொருளும் பலவாக இருக்கவேண்டும் என்பது இல்லை. கல் என்ற ஒரு பொருளையே வெவ் வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக் கிருர்கள். அப்படிக் குறிக்கும் சொற்களாகிய ஒலி வடிவங்களும், எழுதும் வரிவடிவங்களும் வேறு வேறு. எத்தனை மொழிகள் உலகில் உண்டோ அத்தனை மொழிகளிலும் கல் என்பதற்கு வேறு வேறு சொற்கள் இருக்கின்றன. அது மாத்திர மல்ல; ஒரே மொழியில் கூட அதைக் குறிக்க ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் இருப்பதும் உண்டு. இவ்வாறு சொல்லுருவங்களால் கல் பலவேருக இருந்தாலும் கல் என்ற பொருள்