10 பிடியும் களிறும்
கருணையை என்ன என்பது! அன்று அவன் ஆலகால விடத்தை மிடற்றில் வைத்து ஆணவமிக்க அமரரைக் காப்பாற்றினன். பாற்கடலில் பிறந்த அமுதம் அவர் களுக்கு உயிர் தரவில்லை. சிவபிரானகிய கருணைக் கடலில் பிறந்த அருளாகிய அமுதமே அவர்கள் உயிரைக் காப்பாற்றியது. அந்தக் கருணுமிர்தத்துக்கு அறிகுறி யாக விளங்குவது மணிமிடறு. அவன் கானே அந்தப் பழங்காலத்தில் மாத்திரம் வெளிப்பட்டது என்பது இல்லை; தேவர்களுக்கு மாத்திரம் பயன் தரும் என்பதும் இல்லை. இந்தக் காலத்திலும் வருங்காலத்திலும் பயன் படும், எவ்விடத்தில் இருப்போருக்கும் அவன் அருள் தரக் காத்திருக்கிருன். இந்த உண்மையை அவனுடைய எட்டுக் கரங்களும் உணர்த்துகின்றன.
நவ்வந்துவளுர் என்னும் புலவர் மணிமிடற்றுப் பெருமானை நேரே விளித்துப் பேசுகிருர்; 'பெருமானே, உன்னுடைய உருவமும் ஆடலும் நினைக்க நினைக்க இன்பத்தைத் தருவன. நீ வாக்கு க்கும் மனத்துக்கும் அப்பாற்பட்டவன். ஆனாலும் நாங்களெல்லாம் நினைக்க வும் பேசவும் இயலும்படி பல திருவுருவங்களோடு எழுந் தருளியிருக்கிருய். கூற முடியாமல், நினைத்ததற்கு அப்பாலும் செல்லும் இயல்புடையாய். ஆனாலும் கூளி களுக்கும் அருள் செய்து அவற்றைக் கொண்டு தீயோரை அழிக்கும் மாரு த போரை உடையாய், அமரர் பொருட்டு ஆலத்தை உண்டு கறுத்த மணிமிடற்றை உடையாய்; எட்டுக் கைகளை உடையாய்” என்று சொல்கிருர்
கூருமல், குறித்ததன்மேற் செல்லும்-கடுங்கூளி மாருப்போர் மணிமிடற்று எண்கையாய்!
★
உணர்த்த உணரும் தன்மையை உடையவை உயிர் கள் இறைவன் தன் தன்மையையும் உயிர்களின் தன்மை