உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பிடியும் களிறும்

பாண்டரங்கக் கூத்தும் என்பது அடியார்க்கு கல்லார் எழுதிய உரை. -

நச்சிஞர்க்கினியர் மேற்கோளாகக் காட்டும் சூத்திரம் வருமாறு:

ஏறமர் கடவுள் மூவெயில் எய்வுழிக் கூறுகூ ருகக் கொடியொடும் படையொடும் வேறுவே றுருவின் விண்மிசைப் பரந்தனர்; அவ்வழி ஒளியொடும் உருவொடும் தோன்றித் தேர்முன் நின்று திசைதலை பனிப்பச் சுவையும் குறிப்பும் ஒழிவில தோன்றி அவையவை அவ்வழி ஆடினன்; ஆட மைந்தரும் மகளிரும் தந்தம்நிலை அழிய மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக் கடிய காலக் காற்றென வேற்றவன்? படிநிலை திரியாப் பாண்டரங் கம்மே.

இறைவன் இந்தக் கூத்தை ஆடிய பொழுது கண்ட மைந்தரும் மகளிரும் தம்மை மறந்து பரவசப்பட்டனர் என்ற செய்தி இதல்ை தெரிய வருகிறது.

கொடுகொட்டி, பாண்டரங்கம் என்ற இரண்டு கூத்தைப் பாராட்டிய புலவர் மூன்ருவது கூத்து ஒன்றைப் பற்றியும் சொல்கிரு.ர். அந்தக் கூத்தின் பெயர் காபாலம் என்பது. கையிலே பிரமனுடைய கபாலத்தை ஏந்திஆடிய தல்ை அதற்குக் காபாலம் என்ற பெயர் வந்தது.

  • பரதசேளுபதீயம் என்ற பிற்கால நூல், பாண்டரங் கக்கூத்து உலகோற்பத்தி நிமித்தமாக இறைவன் ஆடிய தென்றும், ஆனந்தத் தாண்டவம் என்ற பெயரை உடைய தென்றும் சொல்கிறது (பக்கம், 3.)