பிடியும் களிறும் 41
குறையும், அது குறையக் குறைய மேன்மேலும் முயற்சி செய்து அதை ஈட்டினல் தான், செய்து வந்த அறங்களை இடையிலே முறிவில்லாமல் செய்து வரலாம். அது மாத் திரம் அன்று இல்லறம் நடத்துபவன் அறம் செய்து இன்பம் நுகர்பவன். அந்த இன்ப நுகர்ச்சிக்கும் பொருள் வண்டும். மனைவியோடு வாழ்ந்து மக்களைப் பெற்று வாழும் அவனுக்கு அந்த வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளைப் பெறுவதற்குப் பொருள் வேண்டும்.
அறம் செய்து இன்ப வாழ்வு நடத்திவந்த தலைவ னுக்குப் பொருளைப் பற்றிய நினைவு வந்தது. தான் அது காறும் ஈட்டிய பொருளைக் கொண்டு சிறப்பாகவே அவன் இல்லறம் நடத்தி வந்தான். மீட்டும் பொருள் தேடி வந்தால்தான், தொடர்ச்சியாக அந்த அறங்களை நிகழ்த்தலாம் என்று தோன்றியது. பொருள் ஈட்டுவது அவனுக்குப் பெரிய காரியம் அன்று. வேற்று நாட்டுக்குச் சென்று தன் திறமையினல் மிகுதியான பொருளை சட்டி விடுவான். அப்படி ஈட்டும்போது அவன் செய்த அறம் அவனுக்குத் துணை நிற்கும். அவனுடைய அறிவும் ஆற்றலும் மிக விரைவிலே மிகுதியான பொருளை ஈட்டும் நிலையில் இருந்தன. ஒருமுறை போய்ப் பொருளை ஈட்டி வந்தால் அதை வைத்துக் கொண்டு பல காலம் வாழலாம்.
ஆளுல், ஒரே ஒரு தடை மாத்திரம் இருந்தது. பொருள் ஈட்டுவதற்கு மற்ற நினைவுகளெல்லாம் ஊக்கத்தை ஊட்டின. ஆனல் அந்த நினைவு மட்டும் அந்த ஊக்கத்தைச் சிறிதளவு தளரச் செய்தது. அவன் செய்த அறம், அவனுடைய அறிவு, ஆற்றல், அறத்தின் பால் உள்ள வேட்கை, இன்ப நுகர்ச்சியிலே உள்ள விருப்பம்-எல்லாம் பொருள் ஈட்டும் பொருட்டு அவன் செல்லுவதற்குத் துணையாக இருந்தன. ஆனல் தன் காதலியைப் பிரிந்து செல்லவேண்டுமே என்ற நினைவு ஒன்றுதான் அவனுடைய ஊக்கத்துக்கு முட்டுக் கட்டை