உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

விண்டோய்கன் னுடனும் நீயும் வதுவையுட் பண்டறியா தீர்பேர்ற் படர்கிற்பீர் மற்கொலோ பண்டறியாதீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ? என்று வருபவை இடைமடக்கு நனவிற் புணர்ச்சி நடக்கு மாம் என்று இரண்டாவது அடியில் வருவதையே மீட்டும் நனவிற் புணர்ச்சி நடக்கலும் என்று மடக்கிப் பாடுவ தளுல் இடைமடக்காயிற்று. கலியின் உறுப்பாகிய தாழி சிைகளில் இப்படி இடை மடக்கு வரும். இவ்வாறு வருவது பாடுவதற்கு நயமாக இருக்கும். ஆதலால் இதைக் கந்தருவ மார்க்கம் என்று சொல்வார்கள். கந்தருவம் என் பது இசை; கந்தருவ மார்க்கம்-இசை நெறி. இடை மடக்கி வரும் பகுதிகள் இசையில் அமைத்துப் பாட ஏற் பனவாக இருக்கும்."

கலிப்பா என்பது தமிழில் உள்ள நான்கு வகைப் பாக் களில் ஒன்று. துள்ளலோசை உடையது. அளவிலே பெரியதாகப் பாடும்படி பல உறுப்புக்களே உடையது. சலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 150 பாடல்கள் இருக்கின்றன. பாலே, குறிஞ்சி, மருதம், முல்லை, ந்ெய்தல் என்ற ஐந்து பிரிவுகளையுடையது அது. கடவுள் வாழ்த்தைப் பாடினவர் மதுரை ஆசிரியர் நவ்வந் துவஞர். பாலைக் கலியில் உள்ள 35 செய்யுட்களை இயற்றி னவர் சேரமான் பாலே பாடிய பெருங் கடுங்கோன். அவர் பாலைத்தினை யைப் பாடுவதில் வல்லவர் என்பதை அவரு டைய பெயரோடு சேர்ந்த அடை மொழிகளே

  • அடியுலகம் ஏத்தி அலர்மாரி துவ

முடியுலக மூர்த்தி உறநிமிர்ந்தோன் யாரே

முடியுலக மூர்த்தி உறநிமிர்ந்தோன் மூன்று

கடிமதிலும் கட்டழித்த காவலன் நீ அன்றே (1245) என்று சீவக சிந்தாமணியில் இடை மடக்கி வரும் பாடல் களின் உரையில், 'கந்தருவ ம்ார்க்கத்தால் இன்ட மடக் கின என்று நச்சிஞர்க்கினியர் எழுதுகிரு.ர். சிலப்பதி காரம் முதலிய பழைய நூல்களிலும், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்கால நூல்களிலும் தெய்வங்களின் துதியை ஒருவர் பாடுவதாக வரும் இடங்களில் இடை மடக்காக வரும் கந்தருவ மார்க்கச் செய் யுட்களைக் காணலாம்.