உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 75

உடனே ஓடி வந்து பார்த்தான். இளம் பெண் ஒருத்தி நீரோடு செல்லுதலையும் நாங்கள் தவிப்பதையும் கண்டான். துடுமென்று அந்தக் கடும் புனலிலே பாய்ந்தான். -

நீரிலே கால் அண்டாமல் தள ந்து போய்க் கொண்டிருந்த தலைவியைப் பற்றி அனைத்துக் கொன் டான். மெல்ல இழுத்துக் கொண்டு வந்து கரை யேற்றினன். அப்போதுதான் எங்களுக்கு உயிர் வந்தது. அவன் எத்தனை அழகாக இருந்தான்! தன் விரிந்த மார்பில் நீண்ட சுரபுன்னை மாலையை அணிந் திருந்தான். ஒரு நாட்டுக்குத் தலைவனென்று தோன் றியது. அவன் அழகை வியப்பதா? அவன் வந்த வேகத்தை வியப்பதா? அவன் வேகமாகப் பாய்ந்த போது அவன் அணிந்திருந்த நீள் காகங்றுங்தண்டார் இங்கும் அங்கும் அலைந்து விளங்கியது. ஒரு மெல்லியல் நீரோடு போகிருளே என்ற கருணையில்ை, தனக்கு யாது நேரினும் சரியென்று அவ்வளவு வேகமாகப் பாய்ந்தானே; அந்த அருளே என்னென்பது?

செவிலி : நீங்கள் எல்லோரும் அவனைப் பார்த் தீர்களா?

தோழி : எங்கள் கண்களால் நன்முகக் கண்டோம். முதலில் எங்கள் உயிரே போய்விட்டது போல உணர்வற்று நின்ருேம் நாங்கள். அப்போது அவன் நீர்க்குள் பாய்ந்து அவளுடைய பூண் அணிந்த மார்பை இறுகத் தழுவியபடியே கரையிலே கொண்டு வந்து சேர்த்தான். அவனுடைய அகன்ற மார்பில் அவள் மார்பில் எழுந்த நகில்கள் இணைந்து பொருந்தின. இதை யாவரும் பார்த்தோம். அவ்விரு வரையும் அந்த நிலையில் பார்த்தபோது ஒருவருக் காகவே மற்றவர் படைக்கப்பட்டவரென்று தோன் றியது. எங்களிடம் உண்டாகியிருந்த அச்சம்போய்