பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பின்னு செஞ்சடை

பின்னு செஞ்சடை சிவபிரானுடைய சடை தனித் தனிக் கேசமாக இல்லை. பிரிந்து பரந்தும் நிற்கவில்லை. சிதறாமல் ஒன்றிப் பின்னிய சடையாகச் செம்மையாக இருக்கிறது. பின்னியது போன்ற அந்தச் செஞ்சடையிலே பிறையும் பாம்பும் உடன் உறைகின்றன, என்ன ஆச்சரியம்! அவை தாமே வந்து தங்கினவர்? இல்லை, இல்லை. இறைவன் அவற்றை அங்கே 'வைத்திருக்கிறான். அவன் சடையில் ஏறுவதற்கு" முன் அவை ஒன்றோடு ஒன்று பகைத்தன. சடையில் ஏறிய பிறகு இரண்டும் பகை ஒழிந்து அப்பெருமான் சடைக்கு அணியாகத் திகழ்கின்றன. "ஒத்த இயல்புகளையுடைய பொருள்கள் இருக்கவும், ஒன்று கண்ட இடத்தில் மற்றென்றைக் காண முடியாத பிறையையும் பாம்பையும் உடன் வைத்திருக்கிறீரே! இது என்ன வியப்பு! ஏன் அப்படி - வைத்துக்கொண்டீர் ? சொல்லும் ஐயா! என்று சிவபெருமானை நோக்கி ஆளுடைய பிள்ளையார் கேட்கிறார்,

சொலீர் : - பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

[பின்னியது போன்ற சிவந்த சடையில் ஒன்றுபட்டு வாழாத பிறையைப் பாம்போடு வைத்ததற்குக் காரணம் சொல்லும்.].

இந்த நினைவும் வியப்பும் சம்பந்தப் பெருமா னுக்குத் தம்முடைய சொந்த ஊராகிய சீகாழியில் பிரமபுரீசரைத் தரிசிக்கும்போது தோன்றின. ஆத வின் அந்தப் பெருமானையே கேட்கிறார். - சீகாழிக் குப் பன் காரண்டு திருப்பெயர்கள் உண்டு. பூந்த ராய் என்பது அவற்றில் ஒன்று,