பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னு செஞ்சடை 7. இறைவன். அவனுடைய திருமுன் மற்றேர் இணைப் பைக் காண்கிருேம். உலகம் பதினுன்கானலும் இவற்றை மூன்முகச் சொல்வார்கள், அந்தர் மத்திய பாகலம் என்று. வானம், பூமி, பாதலம் என்ற மூன்று தட்டை, மூவுலகம்" என்றும் வழங்குவ துண்டு. இந்த மூன்றில் பூமியில் இருப்பது பூந்த ராய். அங்கே எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய பூங்கழல் பாதாளத்தையும் ஊடுருவி கிற்பது.

“ பாதாளம் ஏழினுங்கீழ்ச் சொற்கழிவு பாகமலர்' என்பது திருவாசகம். வானத்தில் இருப்பவர்கள் இமையோர். அவர்கள் தங்கள் பதவியை விடாமல் பற்றிக்கொண்டிருப்பவர்கள்; எ ல் லோருக்கும் உயர்ந்தவர்கள் என்று தம்மை நினைத்துக்கொண் டிருக்கிறவர்கள். அவர்கள் வாழும் உலகம் உயர்ந்த உலகம். அவ்வளவு உயரத்தில் இருப்பவர்கள் தாழ்ந்து இறங்கி வருகிறர்கள். அவர்களுடைய தலைகள் வணங்கா முடிகள். அவை மிக மிகக் கீழே உள்ள இறைவன் அடியிலே ஒன்றுகின்றன. மேலுலகமாகிய வானில் இருக்கும் நல்ல இமையவர் களின் உயர்ந்த முடிகள் பாதாளம் ஏழினும் கீழாக உள்ள இறைவன் அடியிலே ஒன்றுகின்றன. இந்த இணேப்பு வியப்பதற்கு உரியதல்லவா?

இது அமைவதற்கு இறைவன் பெருமையே காரணம். தமக்கு வரும் துன்பங்களே நீக்குவதற்கு வேறு புகல் காணுமல், தம் உயர் கிலேயைப் பாது காத்துக் கொள்வதற்காகவே இமையவர்கள் பூக் தராய்க்கு வந்து இறைவன் கழலடியில் முடியை

  • மூவகை புலகும் முகிழ்த்தின் முறையே (இங்குறுநூறு, கடவுள் வாழ்த்து.) -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/13&oldid=596887" இலிருந்து மீள்விக்கப்பட்டது