பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னு செஞ்சடை 9.

இைறவன் அருளால் பகைப் பொருள்கள் தம் பன்கமை நீங்கி ஒன்று படும் என்பது குறிப் பால் புலப்பட்டது. பிறையும் பாம்பும் இறைவன் திருமுடியிலே வேறுபாடற்று அவன் திருக்கோலத் தில் ஒன்றி கின்ரும் போல, இறைவன் அருள் இணேக்கால் இணேயாத பொருள்கள் ஒன்றும் , கில்லாத பொருள் நிற்கும் ; சிதறிய பொருள் சேரும். இறைவன் பால் ஒன்றுபட்டால் அமுதமும் ஈஞ்சும் ஒரே தன்மை பெறும்.

இறைவனுடைய அருளுக்கு உட்படாத வரை

யில் மனிதர்கள் தம் தம் தகுதியால் வேறுபடுவர். ஆனல் அவனுடைய அருளைப் பெற்ற பின்னர் அவர்களுடைய முன்னே இயல்புகள் யாவும் மாறி ஒரே கிலேயை அடைவார்கள். வேதியராகிய சிவ கோசரியாரும் வேடராகிய கண்ணப்பரும் இறைவன் திருவருள் பெற்ற பின் வேறுபாடு இலாயினர். கங்கைக்குள் புகுவதற்கு முன் யமுனேயாகவும், சாக்கடையாகவும் இருக்கவை கங்கையிலே சேர்ந்த பிறகு கங்கையே ஆகிவிடுகின்றன. - ஆதலின் இறைவனைச் சார்வதற்கு முன் எந்த கிலே இருக்தாலும் சார்ந்த பிறகு அவன் அடியா ராகும் திறத்தில் மேல் கீழ் இல்லே. இவற்றை யெல் லாம், பின்னு செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்த செய்தி சொல்லாமற் சொல்கிறது. . . . . .

இந்தப் பாசுரம் திருஞானசம்பக்கர் தேவாரத் தில் இரண்டாம் திருமுறையின் முதற் பதிகத்தின் முதற் பாட்டு. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/15&oldid=596893" இலிருந்து மீள்விக்கப்பட்டது