பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பின்னு செஞ்சடை

தெளிந்தார் சிந்தையுள் அடங்கித் தேனய் அமுத மாய் இனித்து நின்றவனும், எல்லாப் பொருளையும் தனக்குள்ளே அடக்கி கின்றவனுமாகிய இறைவன் நம்மை நாடி வந்து திருமங்கலக்குடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிறன். எங்கோ இருப்பவன் நம்மிடம் உள்ள கருணேயில்ை நமக்கு அணியனுக எழுந்தருளியிருக்கும்போது நாம் சிறிது துனா மேனும் அவனே நோக்கிச் செல்ல வேண்டாமா?

நமக்கு இன்பம் தரும் காரியத்தை நாள் தோறும் செய்கிருேம். உண்பதும் உறங்குவது மாகியவற்றை ஒருநாளாவது மறப்பதில்லை. உடல் வளம்பெறும் செயலே நாள்தோறும் செய்யும்போது, உயிர் வளம்பெறும் செயலே அடுத்தடுத்துச் செய்வது தானே முறை நம்மை நாடி வந்திருக்கும் இறை வனே நாமும் நாள்தோறும் நாடிச் செல்ல வேண்டும். சென்று ஏத்த வேண்டும். இணேயிலா ஆற்றலும் வரம்பிலாக் கருணேயும் உடைய எம்பெருமானே ஏத்துவதுதான் நாவைப் பெற்றதற்குப் பயன். அவனே ஏத்தும் புகழ்தான் உண்மையான புகழ். - ge இறைவன், பொருள் சேர் புகழ்'

என்று வள்ளுவரும்,

  • பூமிமேல் புகழ்தக்க பொருளே " என்று அப்பரும் எடுத்துச் சொல்வார்கள். ஆதலின் இறைவனை நாடிச் சென்று ஏத்த வேண்டும். அவனுடைய கல்யாண குணங்களைச் சிந்தித்தால் நம் உள்ளம் உருகும். அவற்றைச் சிந்தித்துச் சிந்தித்துச் சொல்ல வேண்டும். - -

இறைவன் குணங்கள் நிறைந்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/22&oldid=596914" இலிருந்து மீள்விக்கப்பட்டது