பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிந்து குவிந்தவன்

அழகிய தாமரை மலர் பகற் போதில் விரி கிறது; இரவிலே குவிகிறது. அது விரிந்து விளங் கும்போது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. குவிங்க தாமரையிலும் அழகு தோற்றிலுைம் விரிந்த தாமரையிலே உள்ள அழகு அதற்கு இல்லை. தாமரை விரியும்போது அதன் இதழ்கள் மாத்திரமா விரிகின்றன ; அதன் மணம் விரிகிறது. அதனூடே உள்ள தேன் விரிகிறது. அதற்கு முன் இல்லாத செம்மை விரிகிறது. இறுகச் செறிந்த அரும்பிலே மென்மை தெரிவதில்லை; மலர்ந்த மலரில் அது நன்முகத் தெரிகிறது. . . .

விரிந்த காமரையைப் பார்த்தால் அதன் அடுக் கடுக்கான இதழ்களும் நடுவே கொட்டையும் தெரி யும். மேலே புறவிதழ் இருக்க, அதனேயடுத்து அக விதழ்கள் வரவரச் சிறியனவாக, அடுக்கடுக்காக இருக்கின்றன. பி ப ஞ் சம் விரிந்திருக்கும் கோலத்தை இங்கத் தாமரையின் விரிவைப் போன்ற தென்றே சொல்லலாம். ஒன்றிலிருந்து ஒன்று விரிந்து விளங்கி சிற்பது பிரபஞ்சம். ஒரு தத்துவத்திலிருந்து மற்ருெரு தத்துவம் தோன்ற, அதிலிருந்து மற்முென்று தோன்ற, கடைசி யில் அகில புவனங்களும் விரிந்து கிற்கின்றன. அவை தாமே விரிந்து கிற்கவில்லை. அவ்வாறு விரி யும்படி இறைவன் செய்கிறன். & . . . . . . . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/25&oldid=596924" இலிருந்து மீள்விக்கப்பட்டது