பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிந்து தவிக்தவன் 21. அவன்தன் விரிவைச் சுருக்கிக்கொண்டு குவிகிருரன். இவற்றை நினைந்த ஆளுடைய பிள்ளையார்,

விரிந்தனே குவிந்தனை - என்று பாடத் தொடங்குகிருர், திருப்புறம்பயம் என்னும் தலத்திற்குச் சென்று அங்கே எழுந் தருளி யிருக்கும் சாட்சிகாதரையும் கரும்பன்ன சொல்லியம்மையையும் தரிசித்துக் கொண்டு, திரு நெறித் தமிழாகிய பதிகம் பாடலானர்.

பிரபஞ்சமாக விரிந்தும் அவற்றை ஒடுக்கிக் கொள்ளும்போது குவிந்தும் விளங்கும் இறைவன் உயிர்களே என்ன செய்கிருன் சர்வ சங்கார காலத் தில் எல்லா உயிர்களையும் தன் தாளிணேயின்கீழ் ஒடுக்கி மறைத்துக் கொள்கிருன், இதையே திரோ பவம் என்று சொல்வார்கள். மறைப்பான் என்றும், காளின் கீழ் அடக்குவான் என்றும் சொல் வது போலவே இறைவன் தன் திரு வயிற்றுக்குள் வைத்துக் கொள்வான் என்றும் சொல்வதுண்டு, திருமாலின் அடியார்கள், பிரளய காலத்தில் ஆருயிர்களே யெல்லாம் தன் திரு வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டு மீட்டும் படைப்புக் காலத்தில் அவற்றைப் புறப்பட விடுவான் என்று சொல்வார் கள். உயிர்கள் அனைத்தையும் உண்டும் மீண்டும் உமிழ்ந்தும் அருள் புரிபவன் இறைவன் என்று கவிஞர்கள் பாராட்டுவார்கள்.

பிரபஞ்சமாகி விரிந்தும், அப்பால் குவிந்தும் கிற்கிற இறைவன் குவிந்த காலத்தில் உயிர்களே விழுங்குகிரும்ை; பின்பு உமிழ்கிருளும். கிரோபவத். தால் மறைத்து மீட்டும் படைக்கும்போது உயிர்க்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/27&oldid=596931" இலிருந்து மீள்விக்கப்பட்டது