பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"விரிந்து தவிர்தவன் 23

'கானும் கடலும் கடந்து திரியும் அருளாளன் இறைவன் என்று பாடுவர் புலவர்.

உயிரை விழுங்கி உமிழ்ந்து திரியும் செயல்கள் திருமாலுக்கு மாத்திரமா உரியன? சிவபிராலும் அவற்றைச் செய்கிருரர். அவ்விருவரும் வெவ்வேறு அரசுசெலுத்தித் தம்முடைய ஆட்சியிலடங்கிய பகுதி களில் இப்படிச் செய்கிருர்கள் என்று சொல்ல லாமா ? இருவரும் ஒரே பிரபஞ்சத்தில்தான் இந்தக் கருணேத் திருவிளையாட்டை நிகழ்த்துகிருரர்கள். உண்மையில் இருவரும் ஒருவர்தாம். ஒருவனே இரு வேறு உருவமாகத் தோற்றமளிக்கிருன் ஒரு சாரார் அவனே வலப் பக்கத்திலிருந்து பார்க்கிருரர் கள்; சிவபெருமானுகக் காண்கின்றனர். மற்ருெரு சாரார் இடப் பக்கத்திலிருந்து பார்க்கிறர்கள்; திரு மாலாகக் காண்கிருரர்கள். இருவரும் ஒருவரே என் பதை ஆழ்வார்கள் பாடியிருக்கிருரர்கள். இருவரும் ஒருவர் என்ற உண்மையைச் சிவபெருமானுடைய இருபத்தைக்து மூர்த்தங்களில் ஒன்ருகிய சங்கர நாராயணத் திருக்கோலம் காட்டும். அந்தக் கோலத்தில் திருமாலோடு ஒன்றி யிருக்கிமுன் இறைவன். அப்படியின்றித் தான் வேருக, திரு மால் வேருகப் பிரிந்து நிற்பதும் உண்டு. இதை ஞானசம்பந்தர் சொல்கிரு.ர். - . . . .

குருத்தொசி பெருந்தகையும் நீயும் பிரிந்தனை புணர்ந்தன. - --- (குருத்த மரத்தை ஒடித்த பெருமாகிைய கிருமாலும் யுேம் வேறு வேறு உருவமுடையவர்களாக இருக்கும்படி பிரிந்து கின்ருய்; ஒரே திருவுருவத்தில் இருக்கும்படி ஒன்ருகச் சேர்ந்தும் கின்ருய்.) . . . . . . . . . . * . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/29&oldid=596937" இலிருந்து மீள்விக்கப்பட்டது