பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பின்னு செஞ்சடை

குருந்தமாத்தை ஒசித்தது கண்ண்கை வந்த போது. அவதாரகாலத்துச் செயலைச் சொன்னலும் அது திருமாலின் திருவிளையாட்டாகையால், குருந் கொசி பெருந்தகை என்னும் தொடர் மூல மூர்த்தி யாகிய திருமாலேயே சுட்டியது.

வ்வளவு சிறப்பாக இருக்கும் இறைவன் தனக்குரிய இடங்களாகச் சிலவற்றை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிருன். அவன் எங்கும் கிறைந்தவகை இரு ங் த லு ம் அவனுடைய, கினேப்பை யாவருக்கும் ஊட்டும் இடங்கள் அவை. நம்முடைய வீட்டில் பல அறைகள் இருக்கின்றன. எங்கும் இறைவன் இருக்கிருன். ஆயினும் பூசை அறை என்று ஒன்று இருந்தால், அங்கே இறைவன் இருப்பதாகச் சொல்கிருேம். ஏன்? அங்கேயன்றி மற்ற இடங்களில் அவன் இல்லையா? - அப்படியே கோயிலில் இறைவன் இருப்பதாகச் சொல்லி வழிபடுகிருேம். மற்ற இடங்களில் இல்லையா? மனிதர்களைப் போலத் தமக்கென்று வீடும் விலாசமும் வகுத்துக்கொண்டு இருப்பவன அவன் இல்லை, இல்லை. நாம் ஓரிடத்தில் இருப் பதற்காக நமக்கென்று வீட்டை வகுத்துக்கொள் கிருேம்; நாமே வகுத்துக் கொள்கிருேம். இறை வன் தனக்கு வேண்டுமென்று பூசை அறையையும் கோயிலையும் தானே வகுத்துக் கொள்ளவில்லை. பக்தர்களே அவற்றை வகுத்திருக்கிருரர்கள். அந்த இடங்களில் இறைவன் இருப்பதாக சாம் சொல் கிருேம்; வழிபடுகிருேம், மற்ற இடங்களிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/30&oldid=596941" இலிருந்து மீள்விக்கப்பட்டது