பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பின்னு செஞ்சடை களுக்குத் தாமும் இறக்கக் கூடியவர்களே என்ற நினைவு வருகிறது. இறந்தவர்களின் பிணத்தோடு மயானம் செல்கிருர்கள். மயானத்தில் புகுகின்ற எவருக்கும் வாழ்க்கை நிலையாமை நினைவுக்கு வரு கிறது. ‘இனி இறைவனை வழிபட்டு கல்ல கதி பெற. வேண்டும்” என்ற வேட்கையும் எழுகிறது. இதைத் தான் ஸ்மசான வைராக்கியம்' என்று சொல்வார் கள். கோயில்களைக்காட்டிலும் மயானமே மக்களுக்கு மரண பயத்தையும், அந்தப் பயத்தைப் போக்கும் இறைவன் ஒருவன் உள்ளான் என்ற கினேவையும் அழுத்தமாக உண்டாக்குகிறது. மக்களுக்குக் கட வுள் கினேவு எழும் இடம் எதுவோ அதுவே அவன் கோயில் என்ருல், அந்த கினேவு தெளிவாக உண் டாகும் இடமாகிய மயானமும் அவன் திருக்கோயில் என்று சொல்வதில் என்ன பிழை? அதல்ைதான் இறைவன் மயானத்தில் எழுந்தருளியிருக்கிருன் என்று சொல்வர் பெரியோர். மற்ற எல்லா இடங் களையும் விட அந்த இடத்தில் இறைவனுடைய உண்மை என்ருகப் புலப்படுகிறது. ஆகவே பிணம் புகும் மயானத்தில் அவன் விரும்பி எழுந்தருளி மகிழ்கிரும்ை. -

மற்றவர்களுக் கெல்லாம் மயானம் தங்குவதற். குரிய இடம் அன்று. மாடமாளிகைகளை யெல்லாம் பிறருக்கு அளித்துவிட்டு மயானத்தில் கான் இருப் பேன் என்று சொல்லும் பெருமானது கருணேயை கினைத்துப் பார்க்க வேண்டும். யாவருக்கும் உணவு, அருத்திவிட்டுப் பாத்திரத்தின் அடியிலே கருகிக் கிடக்கும் மிச்சத்தை உண்ணும் தாய்போல இறை வன் மற்றவர்கள் வாழ விரும்பாமல் ஒதுக்கிய இடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/32&oldid=596947" இலிருந்து மீள்விக்கப்பட்டது