பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பின்னு செஞ்சடை

தேடுகிருயே. எல்லாத் துன்பங்களிலும் பெரிய துன்பம் மரணம். அதனைப் போக்கி, மீட்டும் பிறவாமல் காத்து ஆட்கொள்ளும் பெருமான் அவன். ஆகையால் அவனே கினேக்கவேண்டும். நாள்தோறும் நினைக்கவேண்டும். - நெஞ்சு: மரணம் வரும்போதல்லவா அந்தத் துன் பத்தினின்றும் மீள அவனே நினைக்க வேண்டும்? இப்பொழுதே அது பற்றிய கவலை எதற்கு? ஞான மாணம் வரும்போது கினைக்கவேண்டும்

என்பதையாவது உறுதியாக நம்புகிருயா ? நெஞ்சு: ஆம் ; இறைவன் தனக்குவமை இல்லாதவ வன். அவன்தான் யாராலும் தீர்க்க இயலாத மரணக் கவலையைப் போக்குவான் என்று தெரிந்துகொண்டேன். ஆனல் அதற்காக இப் போதே அவனே கினைத்து அவனுக்கு வேலை கொடுப்பானேன் குன: மரணம் வரும்போது அவனே அழைக்கலாம் என்பது நல்ல கினேவுதான். எப்போது அழைத் தாலும் வந்து அருள் செய்யும் கருணேக் கடல் அவன். எனக்கு இப்போது செவ்வி இல்லை என்று சொல்லமாட்டான். ‘வேறு ஒருவனுக்கு உதவிசெய்ய வேண்டும். ஆதலின் உன்னிடம் வர இயலாது என்றும் சொல்லமாட்டான். ஒரே - சமயத்தில் உலகில் உள்ள அனேவரும் அழைத் தாலும் உடனே அனைவருக்கும் அருள் செய் வான். அவன் சர்வாக்தர்யாமி ஆதலின் ஒரே காலத்தில் பலருக்கு உதவும் ஆற்றல் உடையான். நெஞ்சு: ஆகலின் துன்பம் வரும்போது அவனே,

அழைத்தால் போதுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/36&oldid=596955" இலிருந்து மீள்விக்கப்பட்டது