பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎座、 பின்னு செஞ்சடை

உன் இயல்பாயிற்றே! இறைவனிடம் மெய்யான அன்பு கலப்பட்டால் அவன்திறத்துச் செய்யும், செயல்களுக்கு அளவு ஏது? ஆதலின் மலரைக் தினந்தோறும் சுமை சுமையாகத் தலையாலே சுமந்து சென்று பூசிக்க ஆசை தோன்றும். அப் படியே செய்யவும் கூடும். இறைவன் உருவமும், நாமமும் இல்லாகவன் ஆலுைம் ஆருயிர்களின் அன்பு படர்வதற்குப் பற்றுக்கோடு வேண்டு மென்று உருவங்களையும் நாமங்களேயும் ஏற்றுக் கொண்டிருக்கிருன். அவனுடைய திவ்ய மூர்த் தங்களைப் பூசித்து வழிபடுவது அன்பர்களுக்கு இனிக்கின்ற செயல். ஆகலின் மனத்திலே அன்ட முறுக முறுக இறைவனுடைய மங்கலத் திருவடி வங்களைப் பூசித்து வழிபடும் செயல் மிகுதியாகும். நெஞ்சு: பூ நாளும் தலேசுமக்கும்படி கினேக்கிறேன்.

பிறகு ? ஞான: இறைவனுடைய கருணத் திருவிளையாடல் கள் பல. அவனுடைய குண நலங்கள் பல. அவனைப் புகழும் அன்பர்கள் இவற்றை யெல் லாம் எடுத்துச் சொல்விப் பாராட்டுவார்கள். அவ. அடைய திரு.காமங்களை வாயாரச் சொல்லுவார் கள். அவற்றை யெல்லாம் கேட்கும்போது,

காதுக்கு இனிக்கும். தன் காதலனுடைய செயல் . களையும் நாமத்தையும் கேட்கும்போது காதலிக்கு இனிப்பதுபோல அவை இனிக்கும். எங்கே யார் இறைவன் புகழைப் பேசுகிருரர்கள், இறைவன் நாம பஜனை செய்கிருர்கள் என்று தேடிப் போய்க் கேட்கும்படியான ஆர்வம் உண்டாகும். அன்பு இப்படி யெல்லாம் விளையும். இறைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/40&oldid=596964" இலிருந்து மீள்விக்கப்பட்டது